ரத்ததானம் செய்திடுவீர் -- கவிதை

ரத்ததானம் செய்திடுவீர் :
( மறைந்து போன எனது நண்பனுக்காக எழுதிய இக்கவிதை அவனுக்கே சமர்ப்பணம் )


வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நீயும் பிறந்தாய்
நண்பா
வாழ்க்கை ஓட்டத்தின் எங்கோ ஓரிடம்
நானும் பிறந்தேன்

ஓர் நிலையில் ஓர் புள்ளியில்
நானும்,நீயும் சந்தித்தோம்

சந்தித்த நொடியில் உனை பற்றி
சிந்திக்க மனம் செல்ல வில்லை

நாட்கள் நகர நகர
நம் நட்பும் ஆழமானது

எத்தனையோ விவாதங்கள்
நமக்குள் பிறந்தது

ஒன்றிலே நம் எண்ணங்கள்
ஒன்றாகும்
ஒன்றிலே நம் எண்ணங்கள்
வேறாகும்

விவாதங்கள் ஆயிரம் பிறந்தாலும்
எண்ணங்கள் மாறுபட்டு இருந்தாலும்

நம் நட்பென்றும் பிரியாமல்
நம்பிக்கையோடு நடை போட்டது

புத்தகம் படித்தால் தான்
ஞானம் பிறப்பதில்லை

மனித வாழ்வை படித்தாலே
ஞானம் பிறந்திடுமே

ஆம்!உன்னோடு நட்பு கொண்டதினால்
ஓர் உண்மை கண்டேனே

மனித ஓட்டம் ஓட
குருதிஇன்றி ஓர் அணுவும்
அசையாதே

எத்தனையோ பகல்கள்
குருதிக்காக நீ ஓடிய ஓட்டம்

எத்தனையோ இரவுகள்
குருதிக்காக நீ மறந்த தூக்கம்

மொத்தமாய் சுயநலமின்றி
செய்து நின்றாயே

என் எண்ணம் மொத்தமும்
உன்னோடு கலந்து நின்றது
அவ்விடம் தானே

எத்தனை நெஞ்சங்கள் உன்னை வாழ்த்தியது
எத்தனை உள்ளங்கள் உன்னால் வாழ்ந்தது

வாழ்த்திய உள்ளங்களும்
வாழ்ந்த நெஞ்சங்களும்

ஒன்றாகி திரண்டு வந்தால்
நாம்
வசித்த பகுதி தான் திகையுமோ?.

பூமியில் பிறந்தவர் எல்லோரும்
பிறப்பிற்கு அர்த்தம் கொடுத்திடலாகாது

இருந்தும் நண்பா

இப்பூவுலகில் உன் பிறப்பிற்கு
நீ தான் அர்த்தம் கொடுத்து
நின்றாயே

படைத்தவனும் உனை கண்டு
பயந்து இருப்பானோ?

எங்கே நீயும் ஓர் நாள்
படைத்தவன் ஆகி விடுவாயோ
என நினைத்தோ

உன்னையும் தன்னோடு விண்ணில்
சேர்த்துக் கொண்டானோ

நண்பா நீ
விண்ணோடு கலந்தாலும்

மண்ணோடு "ரத்ததானம்" எனும்
விதையை விதைத்து

பலர் நெஞ்சில் இன்றும்
என்றும் எங்களோடு வாழ்கிறாயே

--- உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

Posted By,
Anantha.
.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக