ராணி எலிசபெத் பர்தா போட வேண்டும்-பிரிட்டன் முஸ்லீம் தலைவர்!

லண்டன்: பக்கிங்காம் அரண்மனையை மசூதியாக மாற்ற வேண்டும். ராணி எலிசபெத் இனிமேல் வெளியே போனால் பர்தா போட்டுக் கொண்டுதான் போட வேண்டும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் தலைவர் ஒருவர் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஷரியா ஆதரவு இஸ்லாம்4யுகே என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அஞ்சம் செளத்ரி என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், ராணி எலிசபெத் வெளியே போக விரும்பினால் அவர் பர்தா அணிந்து கொண்டுதான் போக வேண்டும்.

பக்கிங்காம் அரண்மனைக்கு அருகே உள்ள சாலையை மஸ்ஜித் சாலை என மாற்ற வேண்டும். பக்கிங்காம் அரண்மனையை மசூதியாக அறிவிக்க வேண்டும்.

இங்கிலாந்தில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பக்கிங்காம் அரண்மனையில் மசூதிகளில் உள்ளதைப் போன்ற டூம்கள் அமைக்க வேண்டும். ஷரியா சட்டம் வந்து விட்டால் இதெல்லாம் தானாகவே வந்து விடும்.

ஷரியா சட்டத்தை அமல்படுத்திய பின்னர் ராணியின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து விட வேண்டும். ஷரியா சட்டப்படி ராணிக்கு எந்த அதிகாரமும் இருக்காது.

இந்த ஆண்டுக்குள் ரோம் நகரத்திற்கும், வெள்ளை மாளிகைக்கும், பக்கிங்காம் அரண்மனைக்கும் பெரும் சரிவு ஏற்பட்டு அவை செல்வாக்கிழந்து போய் விடும் என்று கூறுகிறார் அஞ்சம்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக