சிவனணைந்த பெருமாள் கோயில் திருவிழா அழைப்பிதழ்-2024

கோயில் திருவிழா அழைப்பிதழ்: தென்காசி பாண்டிய மன்னன் சீவலமாற பாண்டியன் மருமகனும், செங்கோட்டை சோழவளநாடு பகுதியை சோழ - பாண்டியர் என்ற பெயரில்,ஆட்சி செய்த அரசன் செண்பகராமன் , பொன்னுருவி மகனும் ஆவார்
. பொன்னுருவி தாயார், தாய் பத்திரமாகாளியை நோக்கி தவமிருக்க, அந்நேரம் மாகாளி, கைலாசமதிலே சிவனிடம் வேண்டி நிற்க, குலத்திற்கு, தழைக்க ஆண் சந்ததி வேண்டுமென கோரிடவே, உடனே, சிவபெருமான், என் சடலமதிலே சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து சங்கர நாராயணன் ஆகவும், சிவனும் பெருமாளும் சேர்ந்த பாலகன் ஒருவன் பிறப்பான் என்று அருளினார்., "இந்த நல்ல பிறப்பதிலே உனக்கு அருளினாக்கால் இப்பூவுலகில் எல்லோரினிலும் பெரியவனாய் இருப்பான் அடி தாயே... என்ற பகவதி அன்னையின் அருள் வாக்கின் படி விளங்கினமை". வன காளி பத்ரகாளி வளர்த்த வம்சமுடையோன் சீருலாவும் தென்னாஞ்சி நாட்டில் தட்சிணா பூமி ஆன நன் தேசத்தில் ஆருலாவும் பறக்கை நகர் கொண்ட ஊருக்கு, அருகாகவே வளர்.. வாழும் நல்ல நைனாபுதூர் ஊரில் அருள்மிகு சிவனணைந்த பெருமாள் சுவாமியின் குடும்பத்தினர் கோயில் திருவிழா சிறப்பாக நடத்த முடிவு செய்து, அரிகர புத்திர சுவாமி நமோ நமா என்று அடியேனும் துதித்து கரி யானை முப்புரத்தை எரித்த மைந்தன் செங்கோடர் இருக்கும் செந்தூருக்கு மேற்கே வாழும் பரியேறும் குன்றுமலை அய்யாவைவும் வணங்கி, .... பரியேற்றம், கரியேற்றம், வில் அம்பு வித்தைகள், மல்யுத்தம், அடிமுறைகள், பதினெட்டு பாசை , அடவுமுறை, பிடிமுறை , பல பல வித்தைகள், கூடு விட்டு கூடு பாய்தல், பதினெண் புராணங்கள் கற்றறிந்த, அருள்மிகு சிவனணைந்த பெருமாள் சுவாமியின் பொற்பாதக் கமலத்தையும் வணங்கி நைனாபுதூர் அருள்மிகு குன்றுமலை சாஸ்தா, அருள்மிகு சிவனணைந்த பெருமாள் சுவாமியின் அருள் பெற அன்பர்கள் அனைவரையும் வேண்டுகிறோம்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக