டீ கடை நடத்திய மோடி.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தன்னுடைய இளம்வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தி வந்துள்ளார் மோடி. பா.ஜ.க, வில் சேர்ந்த உடன் அவருக்கு படிப் படியாக ஏறு முகம்தான். திருமணம்கூட செய்து கொள்ளாமல் கட்சியின் வளர்ச் சிக்காக அயராது உழைத்தார்.
மோடியின் அயராத உழை ப்பினால் கடந்த, 1998ல் குஜராத் இமாச்சலபிரதேச தேர்தல்பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றி அம்மாநிலத்தின் முதல்வராக கேசுபாய்படேல் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து 2001 அக்., 6ம் தேதி தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்தார் கேசுபாய்படேல். அந்தநேரத்தில் எம்எல்ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார். பிறகு , இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை_தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மோடி, ராஜினாமாசெய்தார். அதே ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில், வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்.

மோடி மதவாதி எனவும் கலவரத்துக்கு காரணமானவர் என்றும் பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதைஎல்லாம் மனதில்கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டும கருத்தில்கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பலதுறைகளிலும், முன் மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டினார். இதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு வித்திட்டது. இவரது சாதனையை பாராட்டி இந்தியாடுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது

2007ல் நடந்த சட்ட சபை தேர்தலின்போது, "மரண வியாபாரி' என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியால் , விமர்சிக்கப்பட்டவர் மோடி. ஆனால் அந்தவிமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும்வகையில் வெற்றிபெற்று மூன்றாம் முறையாக முதல்வரானார் மோடி.

குஜராத்தில், நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என சாதனை யையும் படைத்தார். குஜராத்தில், கணினி துறையில், இவர் உருவாக்கிய வளர்ச்சியின்_காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு, "இரத்னா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்டிஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார்.

குஜராத் மின்மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின்உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டிலேயே முன்னணியில் இருக்கிறது . இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும்வகையில், "குட்கா'வுக்கு தடைவிதித்துள்ளார். மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தியுள்ளார். மும்பை தாக்குதலுக்குப் பிறகு , குஜராத் கடலோர பாதுகாப்பை பன் மடங்கு பலப் படுத்தியுள்ளார்.

சமூக வலை தளமான, "டுவிட்டரில்' இவரை, 11 லட்சம்பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில், ஆன்லைனில் இளைஞர்களுடன், மோடி நேரடியாக கலந்துரை யாடினார். அரசியல்வாதி ஒருவர், இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது இதுவே முதல் முறை.
தற்போது தன்தலைமையில், மூன்றாம் முறையாக, சட்ட சபை தேர்தலை எதிர் கொண்டு, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளதோடு, நான்காம் முறையாக, முதல்வராக பதவியேற்க இருக்கிறார் . கடந்த, 22 ஆண்டு காலமாக, குஜராத்தில், ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கமுடியாமல் தவிக்கும், காங்கிரசை மீண்டும் மண்ணை கவ்வச்செய்துள்ளார்.

Posted; oneindiya

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக