அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்களால், கார்களுடன் விவசாயிகள் வசதியான வாழ்க்கை












முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்க ளால் 3 மடங்கு அறுவடை செய்து வசதியாக வாழ்கிறோம் என பீகார் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள பாலிகன்ச் பகுதியில் பி.பி.கே.எஸ் என்ற விவசாய சங்கம் உள்ளது. இதில் பாலிகன்சை சுற்றியுள்ள 55 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்த பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை நான்கு முறை சென்று அங்குள்ள விவசாயிகளை சந்தித்தார். அவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘டிபாக்‘ அமைப்பு திட்டத்தின் மூலம் விவசாய தொழில்நுட்பங்களை அவர் கற்றுக் கொடுத்தார். தரமான விதைகளை பயிரிடுவது, பயிர் களை பாதுகாப்பது, மண்ணின் வளத்தை பாதுகாப்பது, ராபி, காரிப் பருவங்களுக்கு இடையே மூலிகை செடிகளை பயிரிடுவது போன்ற பல தொழில்நுட்பங்கள் குறித்து அங்குள்ள விவசாயிகளுக்கு கலாம் பாடம் எடுத்தார்.

ராஷ்டிரபதி பவனில் கலாம் இருந்த போதும், அவரை நான்கு முறை சந்தித்துள்ளனர். டிபாக் அமைப்பு விஞ்ஞானிகளின் ஆலோசனை களை பாலிகன்ச் விவசாயிகள் தொடர்ந்து பின்பற்றி னர்.  இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் பாலிகன்ச் பகுதியில் அறுவடை 3 மடங்காக அதிகரித்துள்ளது.







இது குறித்து கோபால் சிங் யாதவ் என்ற விவசாயி கூறுகையில், ‘‘ஒரு ஏக்கரில் 9 குவிண்டால் நெல் அறுவடை செய்த நாங்கள், கலாம் ஆலோசனையால் தற்போது 27 குவிண்டால் அறுவடை செய்கிறோம். ஒரு ஏக்கரில் 5 குவிண்டால் கோதுமை அறுவடை செய்தவர்கள், தற்போது 12 குவிண்டால் அறுவடை செய்கின்றனர்’’ என்றார்.  அறுவடை 3 மடங்கு அதிகரித்ததால் இங்குள்ள விசாயிகள் கார்களுடன் வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக