அன்றொரு நாளில்
எனக்கு காயம் ஏற்பட
யாரோ ஒருவர்
உனக்கு சொல்ல
மனம் கலங்கி
கண்ணீர் விட்டு அழுதாயே ....
சில நாட்கள் வரை
மனம் வெதும்பி
உணர்வற்றவளாக,
சாப்பிடாமலும் தூங்காமலும்
இருந்த அந்த
தருணங்களை
நினைக்கில்
எனக்கு வலித்த வலியை விட
நீ அழுத போதும்,
உன் முகம் கண்ட துக்கத்தை நினைக்கில்
அம்மா என் கண்கள் கலங்கி குளமாகி
கண்ணீரும் வருகிறது..
என் தாயின்
தாயன்பை உணர்ந்த
மற்றொரு தருணமது ....
Best Blogger Gadgets
1 கருத்து :
நெகிழ வைத்த சிறப்பான பகிர்வு...
கருத்துரையிடுக