பசு வதைத் தடுப்புச் சட்டம் தேவையா தேவையற்றதா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்....

உயிர் வதை தடுப்போம்!
- என்.வி.சுப்பராமன்


பசு வதைத் தடுப்புச் சட்டம் தேவையா தேவையற்றதா? 'மிகவும் தேவை' என்பவர் ஒரு சாரார். 'தேவையற்றது' என்பவர் மற்றொரு சாரார். இதைப்பற்றிச் சிறிதும் சிந்தனை செய்யாதார் பிறிதொரு சாரார். மனிதாபிமான (உயிராபிமான) அடிப்படையில் தேவை. பொருளாதார அடிப்படையில் தேவை இல்லை. பசு மாத்திரம் என்ன புண்ணியம் செய்தது? மற்ற உயிர்கள் என்ன பாவம் செய்தன? உயிர்க்கொலை கூடாதென்றால் பசுவதைக்கு மாத்திரம் ஏன் தடை? மற்ற மிருகங்கள், பறவைகள் வதைக்கும் தடை வேண்டாமா? இத்தகு தடைகள் ஒரு பிரிவு மக்கள் நலத்திற்கு எதிரானது. எனவே சட்டம் கூடாது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறில்லை. இவ்வாறெல்லாம் வாதங்களும், விவாதங்களும் நடக்கின்ற இந்நாட்களில், வள்ளுவர் அறிவுறுத்திய கொல்லாமையும், புலால் உண்ணாமையும் அரசியலாக்கப் படுகிறதோ என்பது நல்லோர்களின் சந்தேகம்.


கற்கால மனிதனும், முற்கால மனிதனும், நாகரிகம் காணாத நாட்களில் கிடைத்ததை உண்டு காலம் கடத்தினான். இலையையும் காயையும், வேரையும், பழத்தையும், பறவையையும், மிருகத்தினையும் கொன்று, தின்று பசியாறினான். உடல் வளர்த்தான், உயிர் காத்தான். மனிதனைக் கொன்று உணவாகக் கொண்ட மனிதனையும் இந்த உலகம் கண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு பகுதியில் இப்போதும் இப்பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என எந்த உயிரினத்தையும் மனிதன் ஒதுக்கிவிடவில்லை. அவன் உணவிலிருந்து, உணவுப் பழக்கத்திலிருந்து மனிதனை மாத்திரம் ஏன் ஒதுக்கிவைத்தான்? யானையையும், சிங்கத்தையும், புலியையும், கரடியையும் ஏன் கொன்று சாப்பிடுவதில்லை? இவையெல்லாம் தன்னைவிட வலிமை வாய்ந்தவை என்பதும், இவற்றைக் கொல்லும் வலிமை நமக்கில்லை என்ற அச்சத்தின் விளைவுகளும்தானே? பாவம்! பசுவும், ஆடும், கோழியும், மீனும் தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமை இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு மனிதனுக்கு உணவாகின்றன. "வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னிற் மெலியார்மேல் செல்லுமிடத்து" என்ற வள்ளுவன் வாக்கினை மனிதன் ஏன் மறந்தான்?


கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவற்றில் நமது சான்றோர் சிந்தனை என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். அண்ணல் காந்தி அடிகள் "ப்ளீ பார் வெஜிடேரியனிசம்" என்ற ஒரு புத்தகத்தையே எழுதினார். புலால் மறுக்க வேண்டிய காரணங்களைத் தெள்ளத் தெளிவாக வழங்கினார். அதில் வள்ளுவருடைய அருள் உடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய கருத்துக்கள் இழையோடக் காணலாம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் நிறுவிய ஜீவகாருண்ய இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்கள், பிற உயிர்களைக் கொல்லாமையும், கொன்று கிடைத்த புலாலை மறுத்தலுமே அல்லவா? சமண மதத்தைச் சார்ந்த பெருமக்கள் இன்றும் கதிரவன் மறைவிற்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம், இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மை அல்லவா?கொல்லாமைக்கும், புலால் மறுத்தலுக்கும் வித்தாக அமைந்தது அருளுடைமை எனும் நற்குணமே ஆகும். அதாவது ஜீவ காருண்யமே ஆகும். "நல்லாற்றானாடி அருள் வாழ்க, பல்லாற்றற்றேற்றினும் அஃதே துணை" என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது, எல்லா மார்க்கங்களும் ஜீவகாருண்யத்தைத்தான் போதிக்கின்றன. ஆகையால் நல்ல முறையில் ஆராய்ந்து கருணை வாழ்வைக் கடைப் பிடிக்க வேண்டும். பல மார்க்கங்களையும் ஆராய்ந்தால் அந்தக் கருணை வாழ்க்கைதான் துணையாகக் கூடியது என்று உரை வகுத்தார் நாமக்கல் கவிஞர்.

புலால் உண்பவர்கள் உடல் வலிமை உள்ளவர்கள். எனவே உடல் வலிமை பெற மாமிச உணவு இன்றியமையாதது என ஒரு சாரார் கருத்து. இதனை மருத்துவர்களும், அறிவியல் வல்லுனர்களும் ஏற்பதில்லை. வள்ளுவப் பெருந்தகை இதை அறிந்தே "உண்ணாமையுள்ள துயிர்நிலை ஊனுண்ண வண்ணாத்தல் செய்யாதளறு" என்றார். அதாவது, ஊனைத்தின்பது அருளுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் பொருந்தாது. மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு அவசியமான எல்லாச் சத்துப் பொருட்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன. பின் ஏன் ஊனுண்ண வேண்டும்? மேலும் உயிர் போன பிணத்தை உட்கொள்ள மனிதன் வாய் திறப்பதேன்?


ஓர் ஆடோ, கோழியோ கொல்லப்படும் பொழுது, அவை அனுபவிக்கும் இன்னல்கள் எத்தனை? பாவம், வாயற்ற பிராணிகள், இயலாமை காரணமாக, மனிதன் கொடுவாள் கொண்டு வெட்டும் பொழுது ஓலமிடும் சத்தம் அருள் உள்ளம் படைத்தோருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்துகிறது? மனிதனைப் போன்று அந்த உயிர்களுக்கும், வேதனை, வலி, மகிழ்ச்சி, பசி, தூக்கம், பயம் போன்ற எல்லா உணர்வுகளும் உண்டு. இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதானே? எனவே, அந்தப் பறவையையும், மிருகத்தையும் கொன்று தின்னும் உரிமையை மனிதனுக்கு யார் வழங்கியது? மனிதன் வலிமை படைத்தவன் என்ற ஒரே காரணத்தினால் அந்த உரிமை அவனாகவே அபகரித்துக் கொண்டதல்லவா? அதை எப்படி, யார் நியாயப்படுத்த முடியும்?

கோயில்களில், இடைச்செருகலாக, இறைவன் படைத்த ஆட்டையும், கோழியையும் அவனுக்கே பலியிடும் வழக்கம் ஏற்பட்டது ஒரு கொடுமை. அத்தீய வழக்கத்தை அருளுடைமை படைத்தவரெல்லாம் முயன்று, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டியது இன்றியமையாதது. அப்பணி இறைப் பணியாகும். கண்ணில் தெரியும் காட்சியிலெல்லாம் கடவுள் தெரிகின்றான். ஆட்டிலும், மாட்டிலும், காக்கையிலும், குருவியிலும் கடவுள் இருக்கின்றான். அவற்றைக் கொல்லுதல் அருளுடைமை ஆகாது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அனைவரும் பாடுபடுவோம்!

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்:--------
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!.

இயேசு: 

கொலை செய்யாதிருப்பாயாக, 

அய்யா வைகுண்டர் அருளியது 
பசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே....
&
விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்....


நபிகள் நாயகம்  :
படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான் - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: பைஹகி
 

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

15 கருத்துகள் :

Vijay Meme சொன்னது…

ARUMAI NANBARE

சிறப்பான பதிவு ...ஆயினும் இதனை எத்தனை பேர் ஏற்று கொள்வார்கள் என்பது புதிரே..காரணம் உயிரை கொள்ள வேண்டாம் ,அனைத்து உயிர்களக்கும் வாழும் உரிமை உண்டு என நாம் கூறினால் ....."அப்புடினா ஆடு மாடு கோழி எல்லாத்தையும் உங்க பெட்ரூம் ல வச்சு சம உரிமை குடுங்கனு பேசுற பதிவர்களும் அலைஞ்சு கிட்டு இருக்காங்க ...

என்னை பொறுத்த வரை நான் பசி ஆற இன்னொரு உயிர் அழிய தேவை இல்லை ....நான் மரக்கறியை வெட்டி உண்டாலும் மறுபடியும் அது முளைக்க தான் போகுது ..லைக் தலைமுடி ....

பெயரில்லா சொன்னது…

yes absolutly right...Vijay Meme ....

கபிலன் சொன்னது…

இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னான்னா...பசு என்பது ஒரு LiveStock. தங்க முட்டை இடும் வாத்தை ஒரே நாளில் அறுக்காதே என்று சொல்வாங்க. அதே மாதிரி நமக்கு தினமும் உணவிற்கு பால் தரும் ஒரு விலங்கினத்தை முற்றிலும் அழித்தல் என்பது நம்முடைய வாழ்வாதாரத்தை அழிக்கும் என்பதற்காகத் தான் சொல்லி இருக்கணும். அனைவரும் பருகும் சத்தான உணவான பால் நமக்கு எப்பொழுதும் தேவை என்பது தான் இதனுடைய அடிப்படைக் கருத்தாக அமையும். Economics plays a major role in this than religion & politics.

பெயரில்லா சொன்னது…

கடந்த சில ஆண்டுகளாக நான் மாமிசம் சாப்பிடுவதில்லை. பசுவதை கூடாது என்று மட்டும் சட்டம் இயற்றினால் போதாது.
அப்படியெனில் ஆடு என்ன பாவம் செய்தது? கோழி என்ன பாவம் செய்தது.
மாடுகளுக்குப் பதிலாக ஆடுகளை வளர்ப்போம்.
மாட்டை விட சத்தான பால் ஆடு கொடுக்கிறது.
கோழிகளை முட்டைக்காக மட்டுமே வளர்ப்போம்.
மாடுகளை வளர்ப்பதால், அதிகளவு மீத்தேன் உற்பத்தியாகி, சுற்றுச்சூழலுக்கே பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

பெயரில்லா சொன்னது…

எப்படி பசுவதை இந்துக்களை புண்படுத்துமோ, அதுபோல ஆடுகளை வதை செய்வது, கிறித்தவர்களை புண்படுத்தும் செயல்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கமான அருமையான பகிர்வு... நன்றி...

உங்கள் சொல்வது எல்லாம் சரி... முதலில் மரம் செடி கொடிகளை நேசிக்க தெரிந்தவனால் மட்டுமே மற்றது எல்லாம்...

நன்றி...
tm1

தொழிற்களம் குழு சொன்னது…

அந்த வீடியோவை பார்க்க முடியவில்லை,,, மனது கனக்கிறது,,,

sahul hameed சொன்னது…

சகோதரரே நல்ல எழுதியிறிகீங்க வாழ்த்துக்கள்
ஒரு சின்ன சந்தேகம் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று சொல்றாங்களே
அதை கொள்ளுறது உங்களுக்கு பாவமாக தெரியலையா

/////பாவம், வாயற்ற பிராணிகள்(உயிர்கள்), இயலாமை காரணமாக, மனிதன் கொடுவாள் கொண்டு வெட்டும் பொழுது ஓலமிடும் சத்தம் அருள் உள்ளம் படைத்தோருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்துகிறது? மனிதனைப் போன்று அந்த உயிர்களுக்கும், வேதனை, வலி, மகிழ்ச்சி, பசி, தூக்கம், பயம் போன்ற எல்லா உணர்வுகளும் உண்டு. இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதானே?/////
நீங்கள் எழிதியதை நினைவு படுத்துகிறேன்


/////"வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னிற் மெலியார்மேல் செல்லுமிடத்து" என்ற வள்ளுவன் வாக்கினை மனிதன் ஏன் மறந்தான்?/////
அந்த உயிர்கள் (அதாவது தாவரங்கள்) உங்களை எதிர்த்து தாக்காது என்ற தைரியமா


//////வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் நிறுவிய ஜீவகாருண்ய இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்கள், பிற உயிர்களைக் கொல்லாமையும்,///////
பயிருக்கும் உயிர் உண்டு என்பதை இராமலிங்க அடிகளாருக்கு தெரியாதோ

//////இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மை அல்லவா?/////
பாம்புவோ, தேளோ உங்களை கடித்தால் & உங்கள் குடும்ப உறவுகளையோ கடித்தால், எல்லாத்தையும் இதேபோல் கடித்துவிட்டு போகட்டும் என்று விட்டு விடுவீர்களா

எனது சிறுது சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள் சகோதரரே

Mahesh kumar சொன்னது…

நன்றி...Vijay Meme

Mahesh kumar சொன்னது…

நன்றி..கபிலன்

//கபிலன் சொன்னது…

இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னான்னா...பசு என்பது ஒரு LiveStock. தங்க முட்டை இடும் வாத்தை ஒரே நாளில் அறுக்காதே என்று சொல்வாங்க. அதே மாதிரி நமக்கு தினமும் உணவிற்கு பால் தரும் ஒரு விலங்கினத்தை முற்றிலும் அழித்தல் என்பது நம்முடைய வாழ்வாதாரத்தை அழிக்கும் என்பதற்காகத் தான் சொல்லி இருக்கணும். அனைவரும் பருகும் சத்தான உணவான பால் நமக்கு எப்பொழுதும் தேவை என்பது தான் இதனுடைய அடிப்படைக் கருத்தாக அமையும். Economics plays a major role in this than religion & politics.

Mahesh kumar சொன்னது…

yes....

//பெயரில்லா சொன்னது…

கடந்த சில ஆண்டுகளாக நான் மாமிசம் சாப்பிடுவதில்லை. பசுவதை கூடாது என்று மட்டும் சட்டம் இயற்றினால் போதாது.
அப்படியெனில் ஆடு என்ன பாவம் செய்தது? கோழி என்ன பாவம் செய்தது.
மாடுகளுக்குப் பதிலாக ஆடுகளை வளர்ப்போம்.
மாட்டை விட சத்தான பால் ஆடு கொடுக்கிறது.
கோழிகளை முட்டைக்காக மட்டுமே வளர்ப்போம்.

Mahesh kumar சொன்னது…

கருத்துக்கு நன்றி..

//பெயரில்லா சொன்னது…

எப்படி பசுவதை இந்துக்களை புண்படுத்துமோ, அதுபோல ஆடுகளை வதை செய்வது, கிறித்தவர்களை புண்படுத்தும் செயல்.

Mahesh kumar சொன்னது…

கருத்துக்கு நன்றி.. தனபாலன்//திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கமான அருமையான பகிர்வு... நன்றி...

உங்கள் சொல்வது எல்லாம் சரி... முதலில் மரம் செடி கொடிகளை நேசிக்க தெரிந்தவனால் மட்டுமே மற்றது எல்லாம்...

Mahesh kumar சொன்னது…

me toooooo........


//தொழிற்களம் குழு சொன்னது…

அந்த வீடியோவை பார்க்க முடியவில்லை,,, மனது கனக்கிறது,,,

Mahesh kumar சொன்னது…

hi sahul hameed,

please வள்ளலார் கூறும் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" என்னும் இந்த தெய்வீக நூலை வாங்கி படிக்க....


//sahul hameed சொன்னது…

//////இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மை அல்லவா?/////
பாம்புவோ, தேளோ உங்களை கடித்தால் & உங்கள் குடும்ப உறவுகளையோ கடித்தால், எல்லாத்தையும் இதேபோல் கடித்துவிட்டு போகட்டும் என்று விட்டு விடுவீர்களா

எனது சிறுது சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள் சகோதரரே

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்