தைப்பொங்கல் திருநாள்




எனதன்பு வலைப் பதிவு ரசிகர்கள்/பார்வையாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும்,
என் இதயம் நிறைந்த
தைப் பொங்கல் மற்றும்
தைப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்

நீங்களும் கொண்டாடுங்கள் ...........நீங்களும் பொங்கலிட..


பொங்க வைக்கும் முறை


தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.



எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பெருமையை பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் தருவதால், இதனைத் தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம். தைத் திருநாளாம் பொங்கல் பொழுது புலர்ந்திட, புதுவாழ்வு மலர்ந்திட என் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Best Blogger Gadgets

7 கருத்துகள் :

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

vadai.....

Velmaheshk சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...
vadai.....

ஆஹா என்ன... அதுக்குள்ள ஒரு வடை வந்துடுச்சு........

Velmaheshk சொன்னது…

Hi, MANO நாஞ்சில் மனோ ...


http://nanjilmano.blogspot.com/2011/01/blog-post_04.html


இதை நான் போயி பார்த்தேன்.

yeah, good

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தைப்பொங்கல் திருநாள் Wishes

Velmaheshk சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தைப்பொங்கல் திருநாள் Wishes
12 January 2011 02:00


Thankx

arasan சொன்னது…

தைப்பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்

Velmaheshk சொன்னது…

அரசன் said...
தைப்பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்

Same to You அரசன்

கருத்துரையிடுக