தீரா நோய் தீர்க்கும் மூலிகைகள்

மூலிகைகள் இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமாகும்.

சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை மூலிகைகளால் எளிய முறையில் குணப்படுத்தி விடலாம். இதற்காக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சில மூலிகைகள் மிக சிறந்த பலனைத்தருகின்றன. இவை மனிதனுக்கு வரும் நோய்களுக்கு மட்டுமின்றி விலங்கினங் களுக்கு வரும் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றை உணவில் ஒருவகை எனக்கருதி வாழ்நாள் முழுவதும் உட்கொள்ளலாம். தவறில்லை. இதனால் பின்விளைவுகள், பக்க விளைவுகள் ஏதுமில்லை. இம்மூலிகைகள் நோய்களை குணப்படுத்துவதற்கு மட்டுமின்றி, வராமல் தடுக்கும் ஆற்லும் பெற்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இனி என்ன மூலிகைகள் எந்த நோய்களுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றியும் அவற்றை எவ்வாறு உண்பது என்பது பற்றியும் பார்ப்போமா?


ஆஸ்துமா:


இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரண மாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்:


மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:


தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்:


சக்திக்குரிய வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், திருமாலுக்குரிய துளசி, பிரம்மாவுக்குரிய அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவெளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

______காசநோய்:

இது தொற்று நோய். மைக்கோ பாக்டீரியம் டூபர் குளோசிஸ் என்ற பாக்டீரியா கிருமி காரணமாகப் பரவுகிறது. காசநோய்க்கிருமி முதலில் நுரையீரலில் நுழைந்து பின்னர் ரத்தத்தில் கலக்கிறது. நோய்க் கிருமி உடலில் நுழைந்து உடலில் பலவீனமடையும்போது தாக்குவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.

தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் இக்கிருமி தாக்கும். மூளைக் காய்ச்சல் மூளைக் கட்டி, கைகால் மூட்டு இணைப்புகளில் கட்டி, கண்பார்வை பாதிப்பு, தோலில் ஆறாமல் தொடர்ந்து இருக்கும் புண்கள், சிறுநீரகத்தில் கட்டி போன்ற இடங்களில் காசநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள்:

மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து இருமல், மாலையில் லேசான காய்ச்சல், எடை குறைவு, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.

எப்போதாவது இருமும்போது ரத்தம் வெளியேறும் வாய்ப்பும் உண்டு. காச நோய்க் கிருமி தாக்கும். உடல் உறுப்பைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுபடும். இது பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தை
களையும் தாக்குகிறது.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, வில்வம், அத்தி, அருகம்புல், துளசி, தும்பை, குப்பை மேனி, கீழாநெல்லி, தூதுவளை, நெல்லி ஆகிய மூலிகைகள் அனைத்தையும் எடுத்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதிலிருந்து ஒன்னரை டீஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகக் காலை பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ளவும். இதை சுமார் ஆறு மாதங்கள் வரை உட்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மாதத்திலேயே இந்நோயின் தன்மைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

__காய்ச்சல்:

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:


இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்