அறிஞர் ஐசக் நியூட்டன் ஒரு கூண்டு ..... இரு வாசல்கள் ....

அறிஞர் ஐசக் நியூட்டன் கடைசிவரை திருமணமே செய்யவில்லை. தனியாகவே வாழ்ந்து வந்தார். பூனைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். அவர் இரு பூனைகளை வளர்த்து வந்தார். ஒரு முறை அந்தப் பூனைகளுக்கு ஒரு கூண்டு செய்ய எண்ணி கூண்டு செய்பவரைக் கூப்பிட்டு ஒரு கூண்டு செய்யும்படியும், மறக்காமல் அந்தக் கூண்டில் சிறியதாக ஒரு வாசலும், பெரியதாய் ஒரு வாசலும் வைக்கவும் என்று சொன்னார்.. கூண்டு செய்பவர் ஒன்றும் புரியாமல் ஏன் இரு வாசல்கள் என்று கேட்டார் .

நியூட்டன் சொன்னார் "ஒரு வாசல் பெரிய பூனைக்காக மற்றொன்று சிறிய பூனைக்காக "

கூண்டு செய்பவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். பெரிய வாசல் வழியாகவே சிறிய பூனையும் வந்து செல்லமுடியுமே!

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக