விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழிகள்.


01. யுத்தத்திற்கு எந்நாளுமே தேவையில்லை ! யுத்தமே அநாவசியமானது. நல்லவர் பலரது உயிரைக்காவு கொள்ளும் யுத்தம் அநாகரிகத்தின் அதிசய உருவமாகும்.
02. நல்லியல்புகள் பல கொண்ட மனிதத்தன்மைக்கு மாறானது யுத்தம். மனிதனை மனிதனாக வாழ விடாமல் மிருக இயல்புகளுக்கு ஆளாக்கும் யுத்தம் இன்றி வாழ்வதே அறிவுடைய செயலாகும்.
03. மனிதன் தான் விரும்பாத ஒன்றில் பற்றில்லாமல் வாழ அவனுக்கு உரிமையுண்டு.
04. உரிமைகள் அற்ற மனிதன் பொம்மையே. உரிமைகளுடன் வாழ்வதே எல்லையில்லாத இன்பத்தை தருவதாக அமையும்.
05. ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.
06. மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி.
07. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாட்டில் ஒரு போதும் குடியுரிமை பெறக்கூடாது. அந்த நாட்டில் குடியுரிமை இருந்தால் அதைத்தூக்கி வீசிவிட வேண்டும்.
08. இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எது அடையாளம் என்பதற்கு ஐன்ஸ்டைன் கூறிய உதாரணம். ஓர் இடத்தில் ஐஸ்பழம் விற்கும் கடை ஒன்றில் நல்ல வியாபாரம் நடக்கிறது. அதைப் பார்த்ததும் இராணுவ சர்வாதிகாரிகள் அதன் அருகில் தாமும் ஒரு கடையைப் போடுவார்கள். பின் தமது கடையில்தான் கண்டிப்பாக ஐஸ்பழழ் வேண்ட வேணும் என்பார்கள். அடுத்து மற்றக்கடையில் ஐஸ்பழம் வாங்கக் கூடாது என்று தடைவிதிப்பார்கள். பொது மக்கள் எப்போதுமே அப்பாவிகள் அவர்கள் உத்தரவுக்கு அடி பணிவார்கள். இராணுவ சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சுரண்டி தனது வாயில் போடும்.
09. ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள், உங்களைப் பொறுத்தவரை நான் ஓர் அறிவாளி என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக் கொண்டிருக்கிறேன் சரியாகப் புரியவில்லை.
10. எப்படிப்பட்ட கொடிய தண்டனைகள் கிடைத்தாலும் உண்மையை மட்டுமே உரைக்கிற அற்புதமான பழக்கம் வரவேண்டும், அதுவே வாழ்க்கைக்கு அழகு.
11. குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பை கொல்லும் கொலைகாரரே.
12. இந்த இராணுவ அணிவகுப்புக்கள் எதற்காக ? எங்கோ யாரையோ கொல்வதற்காகத்தானே.. இவைகள் இல்லாமல் வாழ முடியாதா?
13. கத்தோலிக்கர் என்ற சொல்லின் பொருள் பரந்த மனப்பான்மை உடையவர் என்பதுதான். ஆனாஸ் இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த கத்தோலிக்க பாதிரிமார் மதவெறி மிக்க கல்வியை கற்பித்த காரணத்தாலேயே நாஜிசம் தோன்றி உலகை அழித்தது. சர்வாதிகாரி ஹிட்லர் தோன்ற அக்கால கத்தோலிக்க ஆசிரியரே காரணம் என்பதால் ஜெர்மன் குடியுரிமையை தூக்கி வீசினார் ஐன்ஸ்டைன்.
14. கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை படைத்தது எப்படியென்ற இரகசியத்தை அறியவே வாழ்வு முழுவதும் போராடுவேன்.
15. ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் கண்டிப்பும், தண்டனையும் எனக்கு கல்வியை தரவில்லை மாறாக தலைவலியைத்தான் தந்தது.


நன்றி,
அலைகள்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள், உங்களைப் பொறுத்தவரை நான் ஓர் அறிவாளி என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக் கொண்டிருக்கிறேன் சரியாகப் புரியவில்லை.

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்