வாழ்க்கை ஒரு மாயப்பேழை

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்




* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுகிறது. அதில் கர்வம் இருப்பதாய் படவும் கைகளைக் கட்டிக்கொண்டுதான் நடக்கிறேன். உயர்ந்த ஆசனத்தில் உட்காரப் பிடிக்காது. நான் கால்மேல் கால் போட்டு அமரவும் கூசுவேன். சயனிப்பதற்கு சவுகரியமான படுக்கையைத் தேடமாட்டேன். வாய்விட்டுப் பாடமாட்டேன். நீட்டி முழக்கிப் பேசிட அஞ்சுவேன்.



* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.



* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.



* ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.



* பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக