இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?

POSTED BY,
திருச்சிக் காரன்

சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்//

கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதுவும் நல்ல மதம்தான். அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

அவர் தொடர்ந்து பல செய்திகளை , பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும் , அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

“நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

எனக்கு பைபிலில் இயேசு கிறிஸ்து, ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.

இப்ப‌டியாக‌ பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்பைத் தொட‌ர்ந்து உருவாக்கித் தான் முன்பு புனித‌ப் போர்க‌ள் என்ற‌ பெய‌ரில் இர‌த்த‌ ஆறு ஓட‌ விட‌ப் ப‌ட்ட‌து. இப்போதும் வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து.

இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.

இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது!

கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது.

நண்பர்களே நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால் நாம் மிகவும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க வேண்டும்!

இந்துக்க‌ளின் வ‌ழி, அஹிம்சை வ‌ழி, அன்பு வ‌ழி, அறிவு வ‌ழிதான்!

முர‌ட்டுத் த‌ன‌மும், மூட‌த் த‌ன‌மும் உடைய‌வ‌ர்க‌ளிட‌ம், முள்ளில் விழுந்த‌ சேலை போல‌ ந‌ம‌து ச‌முதாய‌ம் சிக்கியுள்ள‌து. சேலைக்கு சேதார‌ம் வ‌ராம‌ல் எடுப்ப‌தோடு, முள்ளை ம‌லராக்க‌ வேண்டிய‌ ப‌ணியும் ந‌ம்மிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

செய‌ல் ச‌க்க‌ர‌த்தை உருட்ட‌ ந‌ம‌து தோள்க‌ளைக் கொடுத்து உத‌வுவோம்

------------------------------
POSTED BY,
ஜடாயு (author)
18 August 2009 at 11:33 pm
// இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?
….
கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது. //

திருச்சி, பயங்கரமாகக் காமெடி பண்ணுகிறீர்கள். கான்ஸ்டாண்டைன் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு அது நிறுவனப் படுத்தப் படுகிறது, அப்போதே அதன் அதிகார வெறியும், பாகன் (pagan) மதங்களின் மீதான வெறுப்பும் ஆரம்பித்து விட்டது. ஆவணப் படுத்தப் பட்ட கிறிஸ்தவ வரலாறு முழுவதுமே அங்கு தான் ஆரம்பிக்கிறது. சொல்லப் போனால் “இயேசு கிறிஸ்து” என்ற மனிதரைப் பற்றீ இப்போது நீங்கள் அறிவது எல்லாமே இந்த நிறுவன மதம் சொன்னது தான். அதற்கு மாறாக உள்ள கருத்துக்கள் (உதாரணமாக, Da vinci code புதினம் சொல்வது போன்றவை) எல்லாம் கிறிஸ்தவ *மத* அமைப்பு ஒன்று கூட ஏற்றுக் கொள்ளாதவை - அவை கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளேயே புழங்குபவை.

எனவே நீங்கள் செய்யப் போவதாக சொல்வது self-defeating circular logic. Good luck!

பைதி வே, இந்த நூலில் சுவாமி தேவானந்த சரஸ்வதி (கனடாவில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து பிறகு இந்து தர்மத்தில் இணைந்தவர்) அவர்களின் அருமையான நேர்காணல் உள்ளது - ‘Christianity, a disaster in human history’. கண்டிப்பாக நீங்கள் அதைப் படித்துப் பார்க்க வேண்டும்
----------------

POSTED BY
திருச்சிக் காரன்
19 August 2009 at 2:06 am
ஜ‌டாயு அவர்களே,

//சொல்லப் போனால் “இயேசு கிறிஸ்து” என்ற மனிதரைப் பற்றீ இப்போது நீங்கள் அறிவது எல்லாமே இந்த நிறுவன மதம் சொன்னது தான். அதற்கு மாறாக உள்ள கருத்துக்கள் (உதாரணமாக, Da vinci code புதினம் சொல்வது போன்றவை) எல்லாம் கிறிஸ்தவ *மத* அமைப்பு ஒன்று கூட ஏற்றுக் கொள்ளாதவை - அவை கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளேயே புழங்குபவை//

இயேசு கிறிஸ்து என்பவர் உண்மையில் இந்த உலகில் இருந்தாரா, அவர் கன்னிக்குப் பிறந்தாரா, குருடர்களைப் பார்க்க வைத்தாரா, முடவர்களை நடக்க வைத்தாரா - என்பதை எல்லாம் நான் அறுதியிட்டுக் கூறவில்லை- சாட்சி குடுக்கவில்லை!

இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இந்த உலகிலே பிறக்காமலே கூட இருந்திருக்கலாம். எனக்கு அவர் செய்த அதிசயங்கள் பற்றி அக்கறையில்லை!

ஆனால் அவர் கூறியதாக சொல்லப் படும் கருத்துக்களில் நன்மை இருக்கிறதா, உபயோகம் இருக்கிறதா- அதாவது அவரின் மதத்தைப் பின்பற்றுவதாக கூறி காட்டுமிராண்டித் தனம் செய்பவரை திருத்தும் அளவுக்காவது நன்மை இருக்கிறதா, உபயோகம் இருக்கிறதா- என்பது தான் என் அக்கறை.

“உன்னை ஒரு மைல் தூரம் வரக் கட்டாயப் படுத்தினால், அவனுடன் இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியதாகக சொல்லப் படும் ஒருவரின் பெயரை வைத்து, உலகின் பிற எல்லா தெய்வங்களையும் இகழும்படி என்னைக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

“ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறி, சிலுவையில் இறந்ததாகக்” கூறப் படும் ஒருவரின் பெயரை வைத்து பல கோடிக் கணக்கான உயிர்களை, (பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உட்பட) கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டார்கள்.

அவர்களை திருத்த வேண்டாமா? அதற்க்கு என்ன செய்ய முடியும்?

நாமும் வாளை உருவியா சொல்லித் தர முடியும்?

இயேசுவின் பெயரை வைத்து பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழக்கையை Tragedy ஆக்கி விட்டார்கள்.

இது காமெடியா?

இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

ஈச்சை மரத்து இன்பச் சோலையில் இருப்பவர்கள் இந்த வேலையை செய்வார்களா? சீனர்கள் இந்த வேலையை செய்வார்களா?

இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

இது காமெடியா?

-----------------------
ஜடாயு (author)
19 August 2009 at 8:04 am
// இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

இது காமெடியா? //

அன்புள்ள திருச்சிக்காரன், உங்கள் நல்ல உள்ளத்தையும், உலக அமைதி மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையையும் புரிந்து கொள்கிறேன்.

நான் காமெடி என்று சொன்னது ”கிறிஸ்தவர்களூக்கு உண்மையான கிறிஸ்துவைப் பற்றி நான் (நாம், அதாவது இந்துக்கள்) சொல்லித்தர வேண்டும்” என்று நீங்கள் குறிப்பிட்டதைத் தான்.

நாம் ஏதாவது சொல்லித்தர முடியும் என்று எண்ணினால், நம் இந்து தருமத்தைப் பற்றி சொல்லித் தரலாம், அதில் நமக்கு புரிதலும், அனுபவமும், பயிற்சியும் உள்ளது. நாம் கிறிஸ்தவத்தை விமர்சிக்க முடியும், அதன் பிரசாரகர்களே அதைப் பற்றி சொல்வதை வைத்தும், அதன் மதநூல்களை வைத்தும், உலகெங்கும் வெளிப்படையாகத் தெரியும் அதன் track record ஐ வைத்தும், நம் நாட்டில் நம் சமூகத்தில் அது என்ன செய்கிறது என்பதை வைத்தும். அது அறிவியல்பூர்வமானது. அதற்கு மேல் போய், நீ உண்மையான *கிறிஸ்தவன்* அல்ல, கிறிஸ்து சொன்னதை நீ கடைப்பிடிப்பதில்லை என்று கிறிஸ்தவனைப் பார்த்து சொல்ல நமக்கு என்ன உரிமை உள்ளது?அதற்கு அவசியம் என்ன உள்ளது?(அப்படிச் சொல்லும்போது “உண்மையான கிறிஸ்தவன்” என்ற இலக்கணத்துக்கு நமது இந்துப் பார்வையையும், இந்து நெறிகளையுமே நாம் பயன்படுத்துவோம். அதில் அடிப்படையிலேயே முரண் உள்ளது).

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஏசுவை *பல தெய்வ அவதாரங்களில் ஒருவராக* ஏற்றுக் கொண்டு அவரது கருத்துக்களைப் பிரசுரிக்கிறார்கள். அது மிகத்தெளிவான இந்துப் பார்வை. ஆனால் “ஏசு ஒருவரே உலக ரட்சகர்” என்ற கிறிஸ்துவப் பார்வைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது. எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ண மடத்தின் கருத்தை எந்த practicing கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்வதில்லை. மிஷனரிகளைப் பற்றீ சொல்லவே வேண்டாம் - “விவேகானந்தர் கண்ட ஏசு” என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் அடிக்கிறார்கள். ஏசுவைப் பற்றி சுவாமிஜி கூறியதில் ஒரு பாதியை மட்டுமே போட்டு, இப்பேர்ப்பட்ட ஏசுவின் பின்னால் மனம் திருந்தி வாருங்கள் என்று பிரசாரம்!

கிறிஸ்வத்தின் இந்த உத்தியை ரா.கி மடம் இப்போது புரிந்து கொண்டு விட்டது என்பதையும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

ஒப்பீட்டில் தலாய் லாமாவைப் பற்றிச் சொல்லவேண்டும்.. ஒரு BBC பேட்டியில் அகிம்சை, சமாதானம், திபெத் பற்றி எல்லாம் கேட்டுவிட்டு, “ஏசு கிறிஸ்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற தூண்டில் போடும் கேள்வியை பேட்டியாளர் கேட்டார். தலாய் லாமா “ஒன்றும் நினைக்கவில்லை” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். கேட்டவருக்கு ஷாக். ஒன்றுமே நினைக்கவில்லையா என்று பன்னிப் பன்னி இரண்டு மூன்று முறை கேட்டார், லாமா பிடிகொடுக்கவில்லை. அவரது வாயிலிருந்து ஏதாவது “நற்செய்தியை” பிடுங்க முயற்சித்த மேற்கத்திய கிறிஸ்தவ பேட்டியாளரின் முயற்சி படுதோல்வி அடைந்தது.

அங்கு ஒரு சராசரி இந்து ஆன்மிகத் தலைவர் என்ன சொல்லியிருப்பார் போன்ற ஊகங்களை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்
---------------------
முத்துக்குமாரசுவாமி
19 August 2009 at 8:50 am
‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று நாமும் கூறிக்கூறி இந்தக் கருணை உள்ளத்தைக் கிறித்தவர்களுக்கே உரிமையாக்கிவிட்டோம். ந்ம்முடைய மதநூல்களில் அருளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கங்கள் உள்ளன.

“பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகள்க்கு
அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
பெறற்கருந் துறக்கந் தம்மினூஉங்கு
இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்” என்று ஞானாமிர்தம் என்னும் சைவசித்தாந்தநூல் கூறுகின்றது. உயர்ந்த பண்பாவது யாது? நித்தியமான ஆன்ம வர்க்கத்துக்கு ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதான ரூப வடிவழகும் பெறுதற்கரிய சுவர்க்க போகமும், தம்மைக் காட்டிலும் மிகப்பெருக உண்டாக வேண்டும் என்னும் எண்ணுதற்கு அரிய பெருங்குணம் ஆகிய இதுவே உயர்ந்த பண்பு. இந்தக் குனத்தின் பெருமை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எல்லை கடந்த பெருமையை உடையதாக இருத்தலினால், இதனை ஞானாமிர்த ஆசிரியர் ‘எண்ணரும் பெருங்குணம்’ என்றார். போட்டிகள் மிக்க இன்றைய உலகில் எல்லாரும் எல்லாவற்றிலும் என்னைக் காட்டிலும் உயர்ந்து விளங்க வேண்டும் என விரும்பும் உள்ளம் தெய்வீக உள்ளமாகத்தானே இருக்கமுடியும்?

அடித்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டு என்று பொறுத்தலை மட்டும் இயேசு கூறினார்.
நம் சாத்திர நுல்கள் ஒருவன் ஒரு தீங்கிழைத்தானேயாயின், அத்தீங்கினைப் பொறுத்துக் கொள்வதோடு, இவன் நமக்கு இந்தத் தீங்கினச் செய்த காரணத்தினால் இனி இறைதண்டனைக்கு உட்பட்டுப் பெருந்துன்பம் அடைவானே என்று அவனுக்காகப் பரிவதும் சான்றோர் கடன் எனப் போதிக்கின்றன. ‘வாளிட்டு நோவன செய்யினும், மேவன ஆங்கு இழைத்தல்’ அதாவது, வாளால் அறுத்து நோய் தருவனவற்றைச் செய்தராயினும் சுகமாய் இருப்பனவற்றை அவர்க்கு அப்பொழுதே விரும்பிச் செய்தல், இது தான் நல்ல மனிதனின் பண்பு என்கிறது ஞானாமிர்தம்.

பிற சமய நூல்களையும் அவற்றில் காணப்படும் அறங்களையும் நாம் படித்து ஒப்புமை காணலாம்.ஆனால் நம்முடைய நூல்களில் சொல்லப்பட்டனவற்றையே நாம் வலியுறுத்தி வெளியில் பேசுதல் வேண்டும். இல்லாவிட்டால் நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் அறவுணர்வுகளுக்கும் உரிய நன்றியைக் கிறித்துவ போதகர்களுக்குத் தாரை வார்த்துவிடும் கட்டாயம் ஏற்பட்டு விடும்

முத்துக்குமாரசுவாமி
19 August 2009 at 8:57 am
ஏசுமத நிராகரணம் என்னும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் செய்யப்பட்டது. வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால், அவர் எழுதிய, சாந்தலிங்க சுவாமிகளின் நூலான, ‘கொலைமறுத்தல்’ உரையில் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது.
ஜடாயு (author)
19 August 2009 at 9:09 am
// வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. //

அன்புள்ள முத்துக்குமாரசுவாமி ஐயா, இதற்கு ஆதாரம் உள்ளதா - வேறு நூல்களில், பதிவுகளில், ஆவணங்களில்?

வீரமாமுனிவர் என்கிற ஜோசப் பெஸ்கி ஒரு உயர்ந்த தமிழ் அன்பர்,புலவர் என்று பயங்கர பிரசாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

முத்துக்குமாரசுவாமி
19 August 2009 at 12:57 pm
அன்புள்ள ஜடாயு அவர்களே, நான் வீரமாமுனிவர் பற்றிச் சொன்ன இந்தச் செய்திக்கு வலுவான ஆதாரம் இல்லைதான். ஆனால்,துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகளோடு தொடர்புடைய அன்பர்களின் வழிவந்தவர்கள் கூறக் கேட்ட செவிவழிச் செய்திதான். இது அவர்களுக்கு எதிராக வைக்கத்தக்க ஆதாரம் இல்லைதான்.

baskar
20 August 2009 at 2:03 am
‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று நாமும் கூறிக்கூறி இந்தக் கருணை உள்ளத்தைக் கிறித்தவர்களுக்கே உரிமையாக்கிவிட்டோம். ந்ம்முடைய மதநூல்களில் அருளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கங்கள் உள்ளன.
“பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகள்க்கு
அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
பெறற்கருந் துறக்கந் தம்மினூஉங்கு
இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்”

ரொம்பவும் எளிமையான ஒரு உதாரணம் , அதுவும் உலகறிந்தது
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்– இதை விடவா ஒரு தத்துவம், பணிவு ஒழுக்கம் அன்பின் இலக்கணம் தேவை. நன்றி ஜடாயு அவர்களே தங்களின் தயவால்
எனக்கு ஒரு புதையல் கிடைத்தது ( சைவ தூஷண பரிகாரம் ) மீண்டும் நன்றிகள். மேலும் தங்களின் இடுகைகள் மிகவும் அற்புதம்
---------------------..
joseph
9 September 2009 at 6:05 pm
Please don’t make a propaganda that all christians in India have converted only because of money, I can show you a number of christians who stick on to their faith till they die, if you know anyone who got converted by getting money then there is no problem you can reconvert him by giving more money. He is well in your pocket.
People like Elst are a disillusioned lot who have an aversion to christianity. European and American white christians are agnostic and atheistic because they do not want any accountability to their actions, do you think that a wayward drunkard, and a drug addict will be enlightened in his inner soul and that was why he left christianity,Comedy of all sorts
If they think that they don’t believe in fables then does hinduism is any way inferior in having fables. Will a reasoning mind that rejected christianity because of fables accept the fables in hinduism.
In western nations it is not the failure of christianity but the failure of church and christianity, the core teachings of christ stands the test of time and it continues to guide us till now and it will continue to do so.

களிமிகு கணபதி
9 September 2009 at 7:38 pm
//….Will a reasoning mind that rejected christianity because of fables accept the fables in hinduism….//

Only “A reasoning mind” can accept Hinduism and reject christianity. The fables of christianity has only sowed violence whereas the fables of Hinduism has brought amity and freedom.

//…..In western nations it is not the failure of christianity but the failure of church and christianity, the core teachings of christ stands the test of time…//

If it is true, then I can only respect church and christianity. Jesus is the first person in any theology to start the idea of “eternal hell” that has started all these violence and aggression, and brought down the humanity lower than animals.

//….and it continues to guide us till now and it will continue to do so….//

The goal of christians on the earth is to prepare for armageddon. As a christian you will prepare the earth for such one.
joseph
10 September 2009 at 12:13 pm
என்னங்க கணமிகு கணபதி அவர்களே
எமதர்ம ராஜன், வைகரணீ கரை, நரக லோகம் இதெல்லாம் இந்து மதத்தில் தானே இருக்கு, வசதியா அதை மறந்துட்டீங்களே.
பைபிளில் உள்ள கதைகள் பிரிவினைகளை விதைத்தது என்கிறீர்கள், இதிகாசங்களில் பலமுறை நல்லவர்கள் எல்லாம் தேவர்கள், தீயவர்கள் எல்லாம் அசுரர்கள் என சதா இவர்களது சண்டையையே மேன்மைப்படுத்தி வந்துள்ளதை மறந்து விட்டீர்களா.
ஏங்க அப்போ மதத்தை வைத்து குஜராத்தில் நடந்தது அர்மெகதோன் தானே. அதை ஜஸ்வந்த் சிங் தானே இப்போது புட்டு புட்டு வைக்கப்போகிறார், இந்த அக்கிரமங்களுக்காக தானே வாஜ்பாய் கண்ணீர் வடித்தார்.

RAMGOBAL
10 September 2009 at 1:08 pm
திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் இணைந்தார் பாஸ்கர் அவர்களே. திருக்குறள் இந்து மறை கிடையாது. அது உலகப்பொதுமறை என்று தங்களுக்கு தெரியாதா. மதங்களை குறிப்பிடாத ஒரே மறை திருக்குறள். பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
களிமிகு கணபதி
10 September 2009 at 1:21 pm
Dear Joseph,

My emphasize is on “eternal” and not on “hell”.

It is true that some of the Hindu scriptures talk about hell. But, the hell or heaven of Hinduism is not a “permanent” hell or heaven; they are not eternal.

Jesus is the firs person who sowed this idea that there is an “eternal hell” and “eternal heaven” and caused the eternal misery called Christianity.

joseph
10 September 2009 at 2:53 pm
நித்திய நியாயத்தீர்ப்பு என்ற காரியமும் அதனால் அடையும் மோட்சம் அல்லது நரகம் என்பதை தெளிவாக இயேசு கூறினார், அதை எப்படி நித்திய துன்பத்தை தோற்றுவித்தார் என்கிறீர்கள், அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். தங்களது செய்கைகள் ஒவ்வொன்றிற்கும் வேதாகமம் செக்மேட் வைத்திருப்பதால் தான் கிறிஸ்தவ ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் கிறிஸ்தவ வேதத்தை விரும்புவதில்லை. தங்களது ஆத்துமா நித்திய அக்கினியில் அல்லல் உறும் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, மாறாக இந்து மதத்தில் உள்ள மறுபிறவி போன்ற காரியங்கள் அவர்களை வசீகரிக்கின்றன.
அதுபோக நித்திய நரகம் இல்லை என்கிறீர்கள் அப்படியானால் ஒரு ஆத்துமா நரகத்திற்கு போய்விட்டு வந்துவிடலாமா, அவரவர் கர்மாவிற்கு ஏற்றபடிதான் மறுபிறவி அமைகிறது என்றால் இடையில் நரகம் எங்கிருந்து வந்தது.
joseph
10 September 2009 at 2:57 pm
வெள்ளைக்காரர்கள் காவி உடை உடுத்திக்கொள்ளும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் போது புளகாங்கிதம் அடைபவர்கள், இந்தியர்கள் கிறித்தவத்தையோ இஸ்லாமையோ தழுவும் போது ஏன் கொந்தளிக்கிறார்கள். கடைசியில் பணத்துக்காக தான் மதம் மாறினார்கள் என்ற அதே மாவை அரைப்பது.

हिन्दू कराप्पान पूच्ची
10 September 2009 at 3:05 pm
//வெள்ளைக்காரர்கள் காவி உடை உடுத்திக்கொள்ளும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் போது புளகாங்கிதம் அடைபவர்கள், இந்தியர்கள் கிறித்தவத்தையோ இஸ்லாமையோ தழுவும் போது ஏன் கொந்தளிக்கிறார்கள். கடைசியில் பணத்துக்காக தான் மதம் மாறினார்கள் என்ற அதே மாவை அரைப்பது.//

ஒன்றே கேட்டீரே… நன்றே சொன்னீரே…

இது நமக்கு நாமே திட்டாத்தின் கீழே வந்தது… கேள்வி கேட்டு சரியான பதிளும் சொல்வார் ஜோசப் அண்ணாத்தை.
திருச்சிக் கார‌ன்
10 September 2009 at 3:31 pm
Dear Mr. Joseph,

//”நித்திய நியாயத்தீர்ப்பு என்ற காரியமும் அதனால் அடையும் மோட்சம் அல்லது நரகம் என்பதை தெளிவாக இயேசு கூறினார்”//

Can you please calarify as what do you mean by “நித்திய”?

Because you know that in tamil the word “நித்தியம்” also used to mention “everyday’”!

So please clarify whether by writing “நித்திய”?

Do you mean “permanent and eternal”

Do you mean “Once for all” or

Do you mean “everyday”

or do you mean anything else?

Also where did Jesus Christ tell this. Can you quote?

joseph
10 September 2009 at 4:15 pm
//ஒன்றே கேட்டீரே… நன்றே சொன்னீரே…

இது நமக்கு நாமே திட்டாத்தின் கீழே வந்தது… கேள்வி கேட்டு சரியான பதிளும் சொல்வார் ஜோசப் அண்ணாத்தை//.

என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ன்னே தெரிய‌லையே க‌ர‌ப்பான் பூச்சி அண்ணாத்தே
joseph
10 September 2009 at 4:18 pm
நியாயத்தீர்ப்பை பற்றி பைபிளில் தெளிவாகத்தான் போட்டிருக்கிறது, இயேசு என்ன சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சுக்கனுமின்னா நான் கு சுவிஷேஷங்களையும் படித்து பாருங்கள். நியாயத்தீர்ப்பு ஒருமுறைதான் நிகழும்.

திருச்சிக் கார‌ன்
10 September 2009 at 4:37 pm
Dear Mr. Joseph,

Can you give your answers clearly?

Can you quote the concerned verse from “”நான்கு சுவிஷேஷங்கள்’”
Edwin
10 September 2009 at 4:44 pm
Dear Brother Joseph,
Thanks for your comments also i thank tamil hindu for publishing joseph comments. I also said earlier the same if anybody converted by force, money, or wordly things e.g job, treatment, studies there will be no place for them in heaven as jesus said. Please don’t tempt our indian brothers by using sensitive words in the name of religion. please visit any of our christian website that vomitting bitter words or irrespect word about other religious leaders or priests. Vande Matharam. velga thamizh. JESUS LOVES YOU

திருச்சிக் காரன்
10 September 2009 at 6:02 pm
//வெள்ளைக்காரர்கள் காவி உடை உடுத்திக்கொள்ளும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் போது புளகாங்கிதம் அடைபவர்கள்//

இந்து மதத்தைப் பின்பற்ற வரும் வெள்ளைக் காரர்களிடம் நாங்கள்,

” இந்து மதத்தில் வணங்கப் படும் கடவுள்கள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள்கள், பிற கடவுள்கள் பொய்யான கடவுள்கள் ” என்று கூற வில்லையே!

பிற மதங்கள் முற்றிலும் தவறானவை என்று கண்டிக்கவில்லையே.

பிற மதங்களில் உள்ள நல்ல பழக்கங்களை பின் பற்றுவதில் தவறு இல்லை என்றுதானே கூறுகிறோம்.

காவி உடை உடுத்திக்கொள்ளும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் வெள்ளைக் காரர் இந்து வான பின் மீண்டும் இயேசு கிறிஸ்துவை வழி பட விரும்பினால் அதற்க்கு தடை எதுவம் இல்லையே! நாங்களும் (நானும் என்னுடன் இருக்கும் இந்து நண்பர்களும்) அவருடன் சேர்ந்து மனப் பூர்வமாக இயேசு கிறிஸ்துவை வழிபடுவோமே!

//இந்தியர்கள் கிறித்தவத்தையோ இஸ்லாமையோ தழுவும் போது ஏன் கொந்தளிக்கிறார்கள்//

ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால், அவர் சர்ச்க்கோ, கோவிலுக்கோ சினகாகுக்கோ (synagouge) செல்ல முடியாது. அப்படி சென்றால் ஷரியா சட்டப்படி தண்டனைக்கு ஆளாக வேண்டும்

இப்போது பரப்படும் ‘கிறிஸ்துவ” மதத்தில் இணைந்தால் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா மக்களையும் கிருஸ்தவர் ஆக்க வேண்டும் என்ற “அருட்செய்தி” மனதில் ஏற்றப் படும்.

இந்துக்கள் எந்த அளவுக்கு இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த உலகில் சமரசம் நிலவும்.

இந்தியாவில் இந்து மதம் அழிந்து இஸ்லாமும் கிருஸ்துவமும் அதிகமாக இருந்தால் இந்தியா முழுவதும் பாலஸ்தீன் போல ஆகி விடும் என்ற கவலையினாலே கொந்தளிக்கிறார்கள்!
தேவப்ரியா சாலமோன்
10 September 2009 at 6:49 pm
ஐயா
எந்த ஏசு?
மத்தேயு சுவ்யில் புனைந்த ஏசு யூதேயாவில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் மகன், ஏரோது இறப்பதற்கு முன் பிறந்தவர்.

லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.

மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.
லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.

யோவானசுவியின்படி ஏசு கடைசி 8 மாதங்கள் குடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு பண்டிகை மற்றும் வெள்ளாடு கொலை செய்யும் பஸ்கா பண்டிகை என முழுமையாக ஜெருசலேமிலேயே இருந்தார், மாற்கு சுவியோ முழுமையாக கலிலியாவிலேயே, கடைசி வாரம் செவ்வாய் வந்து வெள்ளி அன்று கொல்லப் பட்டு துக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டு இறந்தார்.

எது உண்மை எது பொய்.

மத்தேயு சுவிப்படு ஏசுவிற்கு மரண தண்டனைக்கு முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்ததான லஞ்சப் பணத்தை யூதப் பாதிரிகள் எடுத் நிலம் வான்கினர்.

லுக்கா சுவிப்படி, ஏசு இரWதபின் அந்த லஞ்சப் பணம் கொண்டு யூதாசே நிலம் வாங்கி நந்த நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தார்.

ஒருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.

சுவிசேஷங்கள் பற்றிய என் ஆய்வுக் கட்டுரைகள் இங்கே

http://tamil.net/blog/8975
-------------
benedict
12 October 2009 at 12:15 pm
க்ளாடி,

கிறிஸ்துவர் தவறு செய்தால் சொல்லவும் என்றார்.

சர்ச்களில் அடிக்கப்படும் கொள்ளைகள், ஆதாரத்துடன் தேவப்ரியா தந்துள்ளார்.

பைபிள் ஆய்வில் மட்டுமின்றி உண்மையை பிட்டு பிட்டு வைப்பது அழகு.

Where are you?
--------------
http://www.dailythanthi.com/article.asp?NewsID=519892&disdate=10/12/2009&advt=1

தென் இந்திய திருச்சபையின்
சுனாமி நிவாரணத்தில் ரூ.71/2 கோடி மோசடி
பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது

சென்னை, அக்.12-

தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரண பணியில் ரூ.71/2 கோடி முறைகேடு செய்ததாக சென்னை பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செயலாளர் புகார்

சென்னை ராயப்பேட்டையில் செயல்படும் தென் இந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் (பிரதம பேராயம்) பொது செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தென் இந்திய திருச்சபையின் கீழ் 24 துணை திருச்சபைகள் உள்ளன. இதில் 9 திருச்சபையின் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்காவில் இருக்கும் இ.ஆர்.டி தொண்டு நிறுவனம் 17 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 855 ரூபாய் ஒதுக்கியது.

பொருட்கள்

இந்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் மற்றும் மீன்பிடி படகு, மீன்பிடி வலை, வீட்டு உபயோக பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இந்த பணத்தை தென் இந்திய திருச்சபை மூலம் செலவிட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2006-லிருந்து 2008-ம் ஆண்டு வரை இந்த பணிகள் செய்யப்பட்டன. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த பாலின் சத்தியமூர்த்தி இந்த பணிகளை முன்னின்று செய்தார்.

அவர் தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோரை இந்த பணியை செய்ய நியமித்தார். இவர்களுக்கு இதற்காக பெரிய அளவில் சம்பளம் கொடுத்தும், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண பணிக்காக செலவளிக்க கொடுத்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கியும், ஆடம்பர பங்களா வீடு கட்டியும் பல்வேறு முறைகேடுகள் நடந்து விட்டன.

ரூ.71/2 கோடி

மேலும் செலவு செய்த திட்டங்களுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை. சுமார் 71/2 கோடி ரூபாய் அளவுக்கு இதில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பெண் டாக்டர் கைது

இந்த வழக்கில் புகார் கூறப்பட்ட பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள் டாக்டர் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட்சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் டாக்டர் பெனாடிக்டா, ராபர்ட்சுனில் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பெனாடிக்டா சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் ரோட்டில் வசிக்கிறார். இவர் எம்.பி.பி.எஸ். டாக்டராவார். கைதான ராபர்ட் சுனில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் வசிக்கிறார். இவர் வாங்கிய போர்டு எண்டவர் சொகுசு காரை ஏற்கனவே திருப்பி ஒப்படைத்து விட்டார். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல டாக்டர் பெனாடிக்டா வாங்கிய எண்டவர் சொகுசு காரையும் போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

தேடுதல் வேட்டை

இதே போல் இவர்கள் வாங்கிய அதிக சம்பள பணம் மற்றும் கம்ப்ïட்டர்கள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சுனாமி நிவாரண பணிகள் நிறைவேற்றப்பட்ட ஆந்திர மாநிலம் விஜயவாடா, சென்னை, கன்னியாகுமரி, சிதம்பரம், கேரள மாநிலம் ஆகிய இடங்களில் நேரடியாக சென்று இந்த முறை கேடு தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் சத்தியமூர்த்தி, கஸ்தூரி ஆகியோரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலினும், சத்தியமூர்த்தியும் திருச்சியில் வசிக்கிறார்கள். பாலின் தென் இந்திய திருச்சபையின் செயலாளர் பதவிக்கு வரும் முன்பு, திருச்சியில் உள்ள கல்லூÖரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றினார். கஸ்தூரி தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பொருளாளர் ஆவார்.

மேற்கண்ட இந்த தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
-------------------------------
தேவப்ரியா சாலமன்
13 October 2009 at 3:44 pm
ஏஞ்சல் TV யின் பொய்சாட்சிகள்

2008 டிசம்பர் 28ம் தேதி ஏஞ்சல் TV நிகழ்ச்சியில் நிகழ்ச்சியின் இடைவெளியில் சில சாட்சிகளை காண்பித்தார்கள். அதில் ஒன்று சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் பிரசங்கிக்கும்போது ஒரு தாய் மூளைவளர்ச்சி இல்லாத குழந்தையை வைத்துக்கொண்டு கண்ணீரோடு ஜெபிக்கிறதை கர்த்தர் காட்டுவதாகவும் இப்போது இயேசு அந்த குழந்தையை சுகமாக்கிவிட்டதாகவும் கூறினார். அந்த தாய் நான்தான் இதுதான் மூளைவளர்ச்சி இல்லாத என் குழந்தை சாது ஐயா அவர்கள் குறிப்பிட்டது என்னைத்தான். சாது ஐயா அப்படி குறிப்பிட்டு ஜெபித்தும் என் குழந்தை பூரணமாக சுகமாகிவிட்டது என்று அந்த சகோதரி சாட்சி கூறுகிறதை காட்டினார்கள்.

சாட்சியின் ஆரம்பத்தில் அந்த குழந்தையின் தலை நிற்கமுடியாமல் முன்னும் பின்னும் சாய்ந்து விழுவதை காணமுடிகிறது. ஜெபத்துக்குபின் என் குழந்தை சுகமானது என்று அந்த அம்மாள் குழந்தையை காட்டும்போது அந்த குழந்தையை தூங்கிக்கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள். என்ன ஏமாற்று காட்சி இது Mental Retorted Child மூளைவளர்ச்சி குன்றிய பிள்ளை எதுவும் சுகமானதாக சரித்திரம் இல்லை. தாமதமான வளர்ச்சியைதான் அதுவும் பல வருடங்கள் கழித்து ஒரு சிலரிடம் காணலாம். ஆனால் இவர்கள் அப்போதே சுகம் ஆகிவிட்டது என்றும் உடனே காணிக்கை ஏஞ்சல் டிவிக்கு அனுப்பினேன் என்றும் கூறவைத்து பணம் பறிக்கும் ஊழியத்தை செய்வது இது பொதுமக்களை பொய்சொல்லி ஏமாற்றும் கொடூரச்செயல் அல்லவா!

இதற்குமுன் நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் HIV எயிட்ஸ் வியாதி சுகமாகிவிட்டதை என் அருகே நிற்கும் இயேசு காண்பிக்கிறார் என்று பெரிய பொய்யைக்கூறி அந்த வியாதியஸ்தனையும் மேடைக்கு அழைத்து சுகமாகிவிட்டது என்று கூறி ஜெபித்து அனுப்பிய சம்பவம்போல இவர்களும் இப்படிப்பட்ட பொய் சாட்சிகளை டிவியில் காண்பித்து காணிக்கை பெற ஆரம்பித்துவிட்டார்கள். இப்படிப்பட்ட பொய்சாட்சியைக்கூற இவர்களுகெல்லாம் ஒரு இயேசு இருக்கிறார். அந்த அருள்நாதர்தான் இப்படிப்பட்ட பொய்களை கூறமுடியும்.

சாது சுந்தர் செல்வராஜ் அவர்களோடு சகோ.வின்சென்ட் செல்வகுமார் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நம் கடவுளுக்கு நெற்றிக்கண் உண்டு என்று சகோ.செல்வராஜ் அவர்கள் கூற அதை வின்சென்ட் செல்வகுமாரும் ஆதரிப்பதையும், அந்த நெற்றிக்கண் குறித்து விவரிப்பதையும், பிறகு வின்சென்ட் செல்வகுமார் தேவதூதர்கள் இப்போதும் நம்மிடம் வந்துபோகிறார்கள் என்றும் ஒரு தேவதூதனின் இறக்கையை விரித்தப்போது பல கண்கள் அதில் காணப்பட்டது என்றும் அந்த கண்கள் யாவும் உலகத்தை பார்க்கிறதை விவரித்து சொல்வது அம்புலிமாமா கதைப்போல இவர்கள் சம்பாஷிப்பதை புறமதஸ்தர் என்ன நினைப்பார்கள், கிறிஸ்தவ மக்கள் எத்தனைப்பேர் அந்த புராண கதையை நம்பி ஏமார்ந்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது கர்த்தாவே இந்த மாதிரி தவறான உபதேசத்தை சுமந்து வருகிற ஏஞ்சல் டிவியை ஏன் அனுமதிக்கிறீர் என்று ஜெபிக்க தோன்றுகிறது. அதே ஏஞ்சல் டிவியில் சில நல்ல செய்திகள் மற்ற ஊழியர்கள் மூலம் வெளியிடப்படுவது ஒரு ஆறுதல் என்றாலும் சாது செல்வராஜின் நிகழ்ச்சிகள் முழுவதும் ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம்போல் உள்ளதே எத்தனை ஆத்துமாக்கள் இப்படிப்பட்ட தவறான செய்திகளை கேட்டு வேத வசனத்தை விட்டுவிலகிபோகும் என்று மிகவும் வேதனையாக இருக்கிறது.

TV வழி கர்த்தருடைய செய்திகளை சொல்வது கர்த்தரால் நமக்களித்த பெரும் பாக்கியமாகும். ஆனால் அதை தவறான உபதேசத்தை பரப்ப பிசாசு உபயோகிப்பதை நினைக்கும்போது நாம் கடைசி காலத்தில் நிற்கிறோம் என்பது உறுதியாகிறது.

http://www.jamakaran.com/tam/2009/june/angel_tv.htm
----------------

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்