த டேப் எனப்படும் இந்த பல்கலைக்கழக மாணவர்களின் இணையத் தளத்தில் டேப் டாட்டி என்ற பெயரில் வெளியாகியுள்ள பக்கங்களில் இந்த மாணவிகள் கவர்ச்சி போஸ் தந்துள்ளனர்.
இதனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பெயர் கெட்டுப் போய் விட்டதாக பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.
ஆனால் இப்படிப் பேசப் படவேண்டும், விவாதங்கள் கிளம்ப வேண்டும் என்பதற்காக இப்படி அழகிகளுடன் படத்துடன் அந்த இணையதளத்தை உருவாக்கியதாக இந்த இணையதளத்தை உருவாக்கிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கடும் விமர்சனங்களும், நெருக்கடிகளும் நிலவியதால், பெக்கி ஆடம்ஸ் என்ற மாணவியின் படு கவர்ச்சிகரமான படத்தை மட்டும் நீக்கியுள்ளனர். ஆரஞ்சு நிற பிகினி உடையில் இவர் இடம் பெற்றிருந்தார்.
இருப்பினும், ஹெய்தி என்ற இன்னொரு மாணவியின் படு கவர்ச்சிகரமான படத்துடன் அந்த இணையதளத்தில் பக்கம் ஏறியுள்ளது.
தற்போது இந்த இணையதளத்தில், எம்மலினா தாம்ப்செல் என்ற மாணவியின் கவர்ச்சிப் படமும், கெயஸ் என்ற மாணவியின் பிகினி உடைக் காட்சியும் இடம் பெற்றுள்ளன. கெயஸ், கல்லூரி வளாகப் புல்தரையில் படுத்துக் கிடப்பது போல அந்தக் காட்சி உள்ளது.
இணையதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜார்ஜ் (22) டவுனிங் கல்லூரியில் 3ம் ஆண்டு அரசியல் பட்டப் படிப்பு படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த இணையதளம் நிச்சயம் சர்ச்சையைக் கிளப்பும் என எங்களுக்குத் தெரியும். இருப்பினும் சூடான விவாதம் கிளம்பட்டுமே என்றுதான் இப்படிச் செய்தோம் என்றார்.
கவர்ச்சி மாணவிகளில் ஒருவரான எம்மலினா மிகப் பருமன் ஆனவர். இவர் அழகிப் போட்டியிலும் பங்கேற்றவர். ஆனால் மிகப் பருமனாக இருந்ததால் தோல்வியுற்றார்.
கவர்ச்சிகரமாக போஸ் கொடுக்க எந்த மாணவியும் தயக்கம் காட்டவில்லையாம். மாறாக உற்சாகமாக ஒத்துக் கொண்டார்களாம்.
இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் மாணவர் சங்க மகளிர் பிரதிநிதி நதாலி ஸாரக், இந்தக் கவர்ச்சி ப் படங்களை எடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.
இந்த ஆண்டு மே மாதம் இத்தளம் தொடங்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 80,000 ஹிட்கள் கிடைத்தனவாம்.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக