பி. கக்கன்

ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981

கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர்

கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு கால்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .

1955-57 ஆண்டுகளில் பூ.கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்ட இந்த குறுகிய காலமே கோஷ்டி சண்டை மட்டுப்பட் டிருந்த காலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மேலும் கக்கன் தலைவராக இருந்து சந்தித்த 1957 பொதுத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.


கக்கனின் சாதனை மகுடத்தில் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை என பல மாணிக்கக் கற்கள் உண்டு. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அவற்றை அசை போடுவது உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாக அமையும்.


மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என் னும் சிற்றூரில் வாழ்ந்தவர் பூசாரி கக்கன் .இவர் மேலூர் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரியாகவும் அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். இவருக்கு பெரும்பி அம்மாள், குரும்பி என இரண்டு மனைவிகள் உண்டு. தான் தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்து தோட்டியாக பணிபுரிய நேரிட்டாலும் தம் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தணி யாத வைராக்கியத்தோடு பிள் ளைகளைப் படிக்கவைத்தார்.


இவரின் முதல் மனைவிக்கு 1909ஜூலை 18ஆம் நாள் பிறந்தார் நம் கதாநாயகன் கக்கன். ஐந்து வயதில் மேலூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் திருமங்கலம்அரசு மாணவர் விடுதியில் தங்கி உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரி யர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று ஆசிரியர் ஆனார். தான் படித்துத் தேறியது தனக்காக அல்ல, தமது சமுதாயத்துக்காகவே என உணர்ந்த கக்கன், தான் வாழ்ந்த பகுதியில் தீண்டப்படாதவர் வாழும்படி நிர்பந்திக் கப்பட்ட சேரிப்பகுதிகளில் இரவுபாடசாலைகள் அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்து பள்ளிகளில் சேரவைத்தார். இந்த அருந்தொண்டு பற்றி கேள்விப்பட்ட மதுரை வைத்தியநாத ஐயர், இவரை வாழ்த்தி ஊக்கம் அளித்தார்.


விடுதலை இயக்கத்திலும் அரிஜன சேவையிலும் கக்கனின் பணிகள் முத்திரை பதித்தன. மதுரை மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அரிஜனப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலூரில் மாணவ, மாணவியருக்கு என இரண்டு தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. இரண்டுக்கும் கக்கன் காப்பாளராக இருந்தார்.

1938ஆம் ஆண்டு சொர்ணம் பார்வதி என்பவரை மணந்தார். சிவகங்கை அரசரின் உறவின ரான ஆர்.சசிவர்ணத்தேவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சடங்கு சாங்கிய மின்றி எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.1932ஆம் ஆண்டுக்கு பிறகு அரிஜன சேவை யில் மும்முரம் காட்டிய காங்கிரசார்,கோவில் நுழைவுப் போராட் டங்களில் தீவிரம் காட்டினர். கக்கன் அதில் முன்னிலையில் நின்றார்.


1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனிதமடைந்தது. ஆம், அதுவரை தீண்டத்தகாதவர்கள் உள்ளே நுழைய இருந்த வேலியை உடைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் எல்.என் கோபால்சாமி, தலை மையில் பூ.கக்கன், சாமிமுரு கானந்தம், முத்து, விஎஸ் முரு கானந்தம், வி.ஆர். பூவலிங்கம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட தோழர்களும் விருதுநகர் எஸ்.எஸ் சண்முக நாடார் (அன் றைய காலகட்டத்தில் நாடார் களும் தீண்டத்தகாதவர்கள் போல் கோவில் நுழைவுஉரிமை மறுக்கப்பட்டிருந்தனர்)ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்தனர். இதனை “குருதி சிந்தாப் புரட்சி” என ராஜாஜி வர்ணித்தார். அதைத் தொடர்ந்து கூடல் அழகர்,கள்ளழகர் என வரிசை யாக பல கோயில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.அரசும் சட்டமியற்றி உரிமை வழங்கியது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறை யில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக் கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .


காமராஜரின் நம்பிக்கைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய சீடர் ஆனார். 1952-57 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-67 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். முதலில் காமராஜர் முதலமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் அமைச்சராகச் செயல் பட்டார். உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார்.


மூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்கார ராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெய ராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டார்.


அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.

1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது.

1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது.

/////////////////////////
வணக்கம்
பெருமதிப்புக்குரிய சிவா அவர்கள் திரு கக்கன் அவர்களின் சரிதத்தை மிக உன்னதமாகத் தந்துள்ளனர்.
அவருடைய சமாதி தியாகராய நகரில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் உள்ளே நுழைந்தால் வலது பக்கத்தில் எளிமையாக இருக்கிறது.
திரு சிவா அவர்களுக்கு நன்றிகள் பல
அன்புடன்
நந்திதா

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக