இறையடியார்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல!-

பணத்தைத் துச்சமாக மதித்த ஞானி ஒருவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது பெயர் ஜூனைதுல் பக்தாதி (ரலி). இவரது சீடர் ஒருவர் ஞானிக்கு ஒருமுறை 500 பொற்காசுகளைக் காணிக்கையாக அளிக்க முன்வந்தார்.
ஞானி கேட்டார்.
"அன்புச்சீடரே! தங்களிடம் இவ்வளவு தான் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா?" என்று.
"நிறைய இருக்கிறது, ஏன் கேட்கிறீர்கள்? ரலி அவர்களே!" என்ற சீடரிடம், "அதிருக்கட்டும். உங்களுக்கு அந்தச்செல்வம் போதுமா? இன்னும் தேவையிருக்கிறதா?" என்றார் ஞானி.
"ஆம், நான் இன்னும் பொருள் சேர்க்க ஆசைப்படுகிறேன்," என்றார் சீடர்.
"அப்படியானால், என்னை விட உங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் இப்போதும் பணமில்லை. இனி வேண்டும் என்ற எண்ணமுமில்லை," என்றார் ஞானி.


இறைத்தொண்டு செய்பவர்கள் தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அவர்களது தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்.

by Rupa

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக