சன்மார்க்க சிந்தனைக்கு

அன்பு உள்ளம் கொண்ட ஆன்மிக அன்பகர்களுக்கு ஒருமுறை மருதங்காடு என்ற நாட்டில் கந்தசாமி என்ற மாமனிதர் வாழ்ந்து வந்தார் அவர் தீவிர கடவுள் பக்திமான் மற்றும் இறக்க குணம் படைத்தவர் இப்படி அவர் தெய்வ நம்பிக்கையோடு சீறும் சிறப்புமாக வாழ்ந்தாலும் அவர் மனதில் ஒரு சோகம் நிறைந்தவராகவே இருந்தார் அதற்க்கு காரணம் அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களது இல்லத்திற்கு ஒரு மகான் வந்தார் அவர் கந்தசாமியை பார்த்து உங்கள் முகம் வாட்டத்துடன் கானபடுகிறதே என்ன காரணம் என்று கேட்டார் அதற்க்கு கந்தசாமி ஐயா நான் சகல வசதிகளுடனும் வாழ்கிறேன் ஆனாலும் எனக்கு புத்திரபாக்கியம் இல்லை அதுதான் எண் வருத்ததிற்கு காரணம் என்றார் அதைகேட்ட மகான் கந்தசாமியை பார்த்து நீ தெய்வநம்பிக்கை மாத்திரம்வைத்தால் போதாது ஜீவதயவோடு இன்முகத்தோடும் அன்னதானம் செய்யவேண்டும் பசித்தவர்களுக்கு யாராயிருந்தாலும் உணவளிக்கவேண்டும் இப்படி நீ செய்துவந்தால் உனக்கு இந்த உலகம் போற்றத்தக்க அறிவிற்சிறந்த ஞானமே வடிவாக மகன் பிறப்பான் என்று ஆசி கூரினார். அன்றுமுதல் கந்தசாமி அவர் தம் இல்லத்தில் அன்னதானம் செய்யதொடங்கினார் அவர் இல்லத்தில் பசியாறிய அனைவரும் நம் அரும்பசியை போக்கிய கந்தசாமி ஐயா வாழ்வில் வள்ளலார் வணங்கிய அருட்பெரும்ஜோதியின்
கருணையினால் எல்லா நலமும் பெறவேண்டும் என்று அவரை வாழ்த்திசென்றனர், சிலகாலம் கடந்தன. மகான் ஆசி கூரியபடியே தயவே வடிவாகவொரு ஆண்பிள்ளை பிறந்தது பெருமான் அருளால் பிறந்த அப்பிள்ளைக்கு கார்த்திகேயன் என்று பெயரிட்டு சீறும் சிறப்புமாக கண்ணை இமை காப்பதுபோல் வளர்த்துவந்தார்கள் நாளொருமேனியும் பொழுதொருவன்னமாகவும் வளர்ந்த கார்த்திகேயன் வாலிப பருவத்தை அடைந்தான் ,

தந்தைக்கு மகன் தப்பாமல் இருப்பான் என்பதற்கு உதாரணமாக தன் தந்தையைபோலவே நர்சிந்தனையாளனாகவும் தயவுமிக்கவனாகவும் தருமம் பல செய்துவாழ்ந்துவந்தான்
கந்தசாமி தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று பெண் பார்க்கலானார்
இப்படி பெண் பார்த்துகொண்டிருக்கும் வேளையில் காங்கேயம் என்ற பக்கத்து ஊரில் பத்மநாதன்புனிதா தம்பதியருக்கு பிறந்து வளர்ந்து வந்தால் அமுதவள்ளி வானுலக தேவதையோ அல்லது தேவசபை ரம்பையோ என்று வியக்கும் அளவிற்கு அழகிர்சிறந்து விளங்கினால் அமுதவள்ளி.

அமுதவள்ளியை பற்றிகேள்விப்பட்ட கந்தசாமி தன்மகனுக்கு பொருத்தமான பெண்
இவள்தான் என்று பெண்பார்க்க காங்கேயம் புறப்பட்டார்போகும் வழியில் சிறகொடிந்த பறவையை
கண்டு அந்த பறவைக்கு பச்சிலை மருந்தை கொண்டு அதற்க்கு வைத்தியம் செய்து அதன் துயர்நீக்கி சென்றார், காங்கேயம் சென்றடைந்த கந்தசாமி பத்மநாபன் இல்லத்திற்கு சென்று தான் வந்த காரணத்தை கூரினார் பத்மநாபன் கந்தசாமியை பார்த்து தங்கள் மகனை பற்றி பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் ஆகையால் என்மகளை தங்கள் மகனுக்கு மணம்முடித்துவைக்க எங்களுக்கு பூரணசம்மதம் என்றார்,கந்தசாமி தான் வந்த காரியம் இவ்வளவு சுலபமாக முடித்துவைத்த அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வணங்கிவிட்டு தன் மகன் திருமண ஏற்பாடுகளை தொடங்கினார் இந்த பூவுலகில் யாவரும் வியக்கும் வண்ணம் தன்மகன் திருமணத்தை நல்லமுறையில் நடத்திமுடித்தார்,

தங்கள் வாழ்கையில் இல்லற தருமம் தவறாமல் அன்போடும் பரிவோடும் பாசத்தோடும் வாழ்ந்துவந்தார்கள் கார்த்திகேயன் அமுதவள்ளி தம்பதியினர் இப்படி வாழ்பவர்களை பார்த்தால் இவ்வுலகம் பொறாமையோடு பார்க்கும் எப்படியாவது இவர்களுக்குள் பிளவு ஏற்படுத்தவேண்டும் எண்ணி சிலர் அமுதவள்ளியிடம் அவள் கணவனை பற்றி புறம்சொல்லினார்கள் என்னதான் இருந்தாலும் பெண் புத்தி பின் புத்திதான் ஊரார் பேச்சை கேட்டு தன்கணவன் மீது சந்தேகப்பட்டால் சந்தேகம் தான் ஒருவனுக்கு தீராத நோய்,
கார்த்திகேயன் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் அமுதவள்ளி கேட்கவில்லை இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை உருவானது இதனால் மனம் சஞ்சலம் அடைந்த கார்த்திகேயன் அருகில் இருந்த வள்ளலார் வணங்கிய தியாகராஜா பெருமான் வடிவுடை நாயகி கோவிலுக்கு சென்று பெருமானே நாயகியை இடபாகம் வைத்தவா என்று தன்மனம் உறுகி போற்றி துதித்து கொண்டிருந்தான் இரவு நெடுநேரம் ஆகியும் வீடுசெல்லவில்லை கார்த்திகேயன் தன் கணவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததை எண்ணி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் கணவனை கேட்டு தேடினால் அமுதவள்ளி அப்பொழுது அவ்வழியாக சென்ற பெரியவர் உன்கணவன் தியாகராஜா பெருமான் கோவிலில் இருக்கிறான் போ என்றார் உடனே அமுதவள்ளி கோவிலுக்கு போய் தன்கணவன் என்னசெய்கிரார் என்பதை மறைந்திருந்து பார்த்தாள் அங்கே வடலூர் வள்ளலாருக்கு திருத்தணிமுருகன் காட்சி தந்ததுபோல் அவள் கணவருக்கு தியாகராஜா பெருமான் காட்சியளித்துகொண்டிருந்தார் அதை பார்த்தமாத்திரத்தில் தன் கணவன் காலில் விழ்ந்துவனங்கி நான் முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் தங்கள் பெருமை அறியாமல் உங்களை சந்தேகப்பட்டு நானே எண் வாழ்வை சீரழித்துகொண்டேன் எனவே தாங்கள் தயவு கூர்ந்து என்னை தாய்பசுவானது தன் இளங்கன்று செய்யும் குறும்புகளை எவ்வாறு பொருத்து மன்னிக்கின்றதோ அதேபோல் என்னை மன்னித்தருலவேண்டும் என்றால் அமுதவள்ளி,அப்பொழுது கண்விழித்த கார்த்திகேயன் தன்
மனைவியை பார்த்து இதோ நம்மையெல்லாம் ஆட்கொள்ளும் அருள் தெய்வம் அன்பெஉருவான தெய்வம் தியகரஜபெருமான் பாதத்தில் வீழ்ந்து வணங்கு உனக்கு நர்கெதியுண்டாகும் கிடைக்கும் என்றான் கார்த்திகேயன் தன்கணவன் கூரியபடியே தியகராஜபெருமானையும் வடிவுடைனாயகியையும் வணங்கினால் அமுதவள்ளி

அப்போது தியாகராஜா பெருமான் கார்த்திகேயனை பார்த்து அன்பனே நீ என்மீது வைத்த அன்பை கண்டு மகிழ்ந்தேன்.இனி நீ என்னை வந்தடைந்து சிதம்பரம் ராமலிங்கம் வள்ளலார் அடைந்த பேரானந்தத்தை பெறுவாயாக என்று தன்யிருகரம் நீட்டி வரவேற்றார், கார்த்திகேயன் தியாகராஜா பெருமானை பார்த்து பெருமானே தங்கள் தரிசனம் கண்டு பேரானந்தத்தில் களிக்கின்றேன் ஐயனே எனக்கு ஒருவாரம் தரவேண்டும் என்றான் தியாகரஜபெருமானும் அவ்வரத்தை தருவதாக உறுதியளித்தார் ஐயனே இந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளும் வாழ அருள்புரியும் தாங்கள் எனது மனைவிக்கும் தங்கள் பாதத்தில் இடமளிக்கவேண்டும் என்றான்,உனது மன்னிக்கும் திறனை கண்டு மகிழ்ந்தோம் பூவோடு சேர்ந்த நாறும் மனம் பெரும் என்பது போல உன் மனைவிக்கும் அதே பாக்கியத்தை அளிக்கிறோம் என்று தன் அற்புத திருவடியின் கீழ் ஆட்கொண்டு அருள்புரிந்தார்

எனவே அன்பர்களே நாமும் அன்னதானம் செய்து பிறர் பசியை போக்கி பிற உயிர்களிடத்தில் சகோதர பாசத்தோடு வாழ்ந்து வந்தால் நமது இறைவன் அருட்பேரும்ஜோதி நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை ஆகவே ஜீவகாருன்யத்தோடு வாழ்ந்து நமது வாழ்க்கையை செம்மைபடுதிகொள்வோம்

என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்

அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்