முட்டாள் ஜோக்ஸ்

ஒருவன்;" இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"

இரண்டாமவன்:"என்ன புரிஞ்சிடுச்சு?"

முதலாமவன்:"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"

இரண்டாமவன்:"எதுக்கு?"

முதலாமவன்:"எறும்பு வராம இருக்கத்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------
புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.

"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.

"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.

வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.

முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்..

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்