மன்னர்கள் நகைச்சுவை

1.மன்னா நம் நாட்டுக்குள் ஊடுருவியிருந்த ஒற்றன் நாட்டை விட்டு ஓடிவிட்டான்.
நல்ல செய்தி அதற்கு ஏன் பதறுகிறீர்கள் மந்திரியாரே?

நம் இளவரசியும் அவனுடன் ஓடிவிட்டார் மன்னா.


2. கும்பகர்ணனுக்கு பிடித்த மரம் எது?
தூங்கு மூஞ்சி மரம்.

3.மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?

இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.

4. மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

5. படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...
எப்படி?

அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

6. அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?
ட்ரூ பிஸ்கட்

7. மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?
நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.

8. சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

9. போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.
அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

10.ராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!
அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

11. போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்?
தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்த ரன்.

12. மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?
போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்

13. மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?
சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.

14. மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக் க வந்து கொண்டிருக்கிறான்.
அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்