கணவன்- மனைவி நகைச்சுவை

சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
********************************************************************

ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.
********************************************************************

அவசரம் அவசரமாக மெடிக்கல் ஸ்டோருக்கு ஓடி வந்த ஒரு பெண் கடைக்காரரை பார்த்து ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் ஒன்று வேண்டும் சீக்கிரம் கொடுங்கள். என்றாள்.
கடைக்காரர் எதற்கு? என்றார்.

என் கணவனை கொல்வதற்குத் தான் என்றாள். அந்த பெண். உடேன கடைக்காரன் பதறி, ஐயோ டாக்டர் சீட்டு இல்லாமல் விஷம் தரமாட்டேன். உடேன அப்பெண் என் கணவன் மோசமானவன், நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறான் இந்த போட்டோவை பாருங்கள் எனக்காட்டினாள். அதை பார்த்த கடைக்காரன் கடும் கோபமாகி இந்த அயோகியனை உடனே கொல்லுங்கள் என விஷபாட்டிலை எடுத்து கொடுத்தான். கடைக்காரன்.

மனம் மாறியது எப்படி?

ஏனென்றால் போட்டாவில் அந்த பெண்ணின் கணவனுடன் உல்லாசமாக இருந்தது போட்டோகாரருடைய மனைவி.
********************************************************************

அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?
********************************************************************

கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.

கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்