பூண்டி மகான் சுவாமிகளின் பொன்மொழிகள்

பூண்டி மகான் சுவாமிகளின் பொன்மொழிகள்...
--------------------------------------------------------------



தன் பசித்துன்பத்தைக் பொறுத்துக் கொள்ளுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.

பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.

இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.

மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.

மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.

தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனுமானவன்.

எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.

மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக